Subscribe - Daily Updates

Hi manisat

#ref-menu

Friday, March 15, 2013

மாணவர் போராட்டத்துடன் இணைந்தார் நடிகர் சிலம்பரசன்.......வாழ்த்துவோம்....

மாணவர் போராட்டத்துடன் இணைந்தார் நடிகர் சிலம்பரசன் வாழ்த்துவோம்....


மாணவர்களின் வெறித்தனமான போராட்டம் .....
ஈழம் வென்றே தீறுவோம் ....


திருவண்ணாமலையி்ல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலைகளில் முழங்கால் போட்டு மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இலங்கையில் சுதந்திர தமிழ் ஈழம் அமைக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும், இலங்கை மீது பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தியும் தமிழகம் எங்கும் கல்லூரி மாணவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இலங்கையில் நடந்த இறுதிகட்டப்போரின்போது, பல லட்சம் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொடூரமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டான். இது தொடர்பான போர்குற்றக்காட்சிகளை சேனல்போர் தொலைக்காட்சி வெளியிட்டதை அடுத்து நாடு முழுவதும் பலத்த கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் பல்வேறு கட்சிகள் இலங்கை போர்க்குற்றத்தை இந்தியா கண்டிக்க வேண்டும், இராஜபக்ஷேவிற்கு கடும் தண்டனை கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
இதனிடையே தமிழ் உணர்வாளர்கள் மட்டுமல்லாமல், கல்லூரி மாணவர்களும் போர்கொடி தூக்கியுள்ளனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இலங்கைக்கு எதிரான துரித நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ள வேண்டும், இராஜபக்ஷேவிற்கு கடும் தண்டனை வழங்க வேண்டும், இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னையில் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் நான்காவது நாளாக பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவி;த்து மாநில கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக பட்டினி போராட்டம் மேற்கொண்டுள்ளனர். மற்ற மாணவர்களும் இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மேலும் இலங்கை அதிபர் இராஜபக்ஷே உருவ பொம்மை இரண்டு இடங்களில் எரிக்கப்பட்டு இலங்கைக்கு எதிரான எதிர்ப்பு வலுவடைந்துள்ளது. மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகம் முன்பும், பழைய பேருந்து நிலையம் அருகிலேயும் இராஜபக்ஷே உருவ பொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோயம்புத்தூரில் பாரதியார் பல்கலைக்கழக மாணவ-மாணவியர் நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேசினார்.
இலங்கை இன அழிப்புக்கு துணைபோன இந்திய அரசை கண்டித்தும், இராஜபக்ஷேவை தண்டிக்க வலியுறுத்தியும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மாணவ-மாணவியர் இன்று இரண்டாவது நாளாக பட்டினி போராட்டத்தை தொடருகின்றனர். இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் பிணக்குவியல், விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் புகைப்படங்களை பதாகைகளாக பிடித்துக்கொண்டு, இலங்கைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
கரூரில் இலங்கை பிரச்சினையை முன்னிருத்தி அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவியர் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு கல்லூரி வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னதாக சாலை மறியல் செய்ய முயன்றவர்களை காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோ தலைமையிலான காவல்துறையினர் தடுத்து நிறுத்தி போராட்டத்தை அறவழியில் நடத்த அறிவுருத்தினர்.
மதுரையில் கடந்த ஒரு வார காலமாக மதுரை கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பேரணியும் நடத்தி ஆர்ப்பாட்ட முழக்கங்கள் எழுப்பினர். இதனிடையே சட்டக்கல்லூரி மாணவர்கள் திடீரென ஒன்றுதிரண்டு தல்லாகுளம் அருகே உள்ள தலைமை தபால் அலுவலகம் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி அவர்கள் முழக்கம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா, மாவட்ட துணை ஆணையர் திருநாவுக்கரசு, ஆகியோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் தமிழ்நாடு சார்பில் அதன் மாநில தலைவர் சகாயராஜ் உத்தரவிற்கிணங்க, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். சென்னையை அடுத்த ஆவடியில் திருவள்ளுர் மாவட்டம் சார்பில் ஆவடி ரயில் நிலையத்தில் ஊடகவியலாளர்கள் ஒன்றுதிரண்டு மின்சார ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆவடி, திருவள்ளுர், திருத்தணி, பொன்னேரி, அம்பத்தூர், பூவிருந்தவல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் இதில் கலந்து கொண்டனர். சங்கத்தலைவர் அருள்மொழி, செந்தில்குமார், தமிழ் ஊடக பத்திரிகையாளர்கள் நலச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலுசேகர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பால்சோசப், மதியழகன், பார்த்தசாரதி, பரத்குமார், இராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆவடி இணையாணையர் மனோகரன் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே செங்கோட்டையில் தபால் நிலையத்தை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இராஜபக்ஷேவிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள் தொடர்ந்து உருவபொம்மையை எரித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
வால்பாறையில் நாம் தமிழர், பெரியார் திராவிடர்கழகம், ம.தி.மு.க, வழக்கறிஞர்கள், தமிழ் சங்கம் இணைந்து இராஜபக்ஷே கொடும்பாவி எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அந்தந்த கட்சி, அமைப்புகளை சேர்ந்த நாகராஜ், குபேந்திரன். பொன்னுசாமி, சண்முகம், ராஜேந்திரன்,பெருமாள், விஸ்வநாதன், பாஸ்கர் உடப்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தொழுதூர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 500-பேர் நேற்று பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் ரத்த அஞ்சலி எனும் வித்தியாசமான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாலச்சந்திரனின் உருவப்படம் முன்பு கையை கத்தியால் கிழித்துக்கொண்டு ரத்தத்தை வழியவிட்டு அஞ்சலி செலுத்தினர். இந்த போராட்டம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் மாணவர் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் தமிழ் ஈழத்திற்கான மாணவர் போராட்டக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழு சார்பில் வரும் 18-ஆம் தேதி அன்று தமிழக அளவில் ஒரே நேரத்தில் மாணவர்கள் அனைவரும் வகுப்புகளை புறக்கணித்து மறியல் மற்றும் உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

THANKS FOR VISIT

Note: Only a member of this blog may post a comment.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More