Subscribe - Daily Updates

Hi manisat

#ref-menu

Wednesday, January 30, 2013

vishwaroopam kamal interview - பகுத்தறிவாளன் கமலஹாசனின் பேட்டி

பகுத்தறிவாளன் கமலஹாசனின் பேட்டி
விஸ்வரூபம்
திரைப்படம்
தடை குறித்து நடிகர்
கமலஹாசன்
சென்னையில்
செய்தியாளர்களை இன்று (30.01.2013)
காலை சந்தித்தார்.
அப்போது அவர்
கூறியதாவது,
என்னுடைய
ரசிகர்கள்
தியேட்டர்களுக்கு போய்
வெளியே அனுப்பப்பட்டுள்ளார்கள்
போலீஸ்காரர்களால்.
எனக்கு என்ன அவசரம்
என்பதை நான் சொல்லுகிறேன்.
மற்றவர்களுக்கு என்ன
அவசரமோ எனக்கு தெரியாது.
என்னுடைய இந்தப்
படத்தை எடுப்பதற்காக பெரும்
செலவு ஆகியிருக்கிறது.
இதனை நம்பி எடுத்திருக்கிறேன்.
காரணம், இந்தப் படம் நன்றாக
ஓடும் என்று அனுபவத்தினாலும்,
எனக்கு இருக்கும் ஓரளவு தொழில்
நுட்பத்தினாலும், இதை நடத்திக்
காட்ட முடியும்
என்று என்னுடைய வியாபார
அனுபவத்தில் எல்லாவற்றையும்
முதலீடு செய்திருக்கிறேன்.
எனக்கு பெரிய சொத்துக்கள்
கிடையாது என்பது ஊர் அறிந்த
விஷயம். ஆனால் சென்னையில்
எனக்கு இருக்கும் சொத்துக்கள்
அனைத்தும் இந்தப் படத்திற்காக
எழுதி கொடுக்கப்பட்டிருக்கிறது.
ரிலீஸ் தேதி தள்ளிப் போக போக
எனக்கு பணம் கொடுத்தவர்
இதை எழுதி அவர்
பெயருக்கு மாற்றிக்கொண்டுவிட்டார்.
ஆக இந்த
தேதியை கடந்தோமேயானால் இந்த
வீடு எனது அல்ல. இந்த வீட்டில்
நான் நிறைய அனுபவத்துள்ளேன்.
டான்ஸ் கத்துக்கிட்டேன், பல
பிரஸ்மீட் வைத்துள்ளேன்.
ஒரு வேளை இன்றைய
தீர்ப்பு எனக்கு சாதமாக
வரவில்லை என்றால், இனிமேல்
பிரஸ் மீட் இங்க நடத்த
முடியுமா என்று தெரியவில்லை.
அதனால் சந்தோஷமாக ஒரு பிரஸ்
மீட் நடத்திவிடலாம்
என்று உங்களை அனைவரையும்
அழைத்தேன்.
என்னடா சிரித்துக்கொண்டே சொல்கிறேன்
என்று பார்த்தீர்கள் என்றால், எங்க
வீடே அப்படித்தான். எங்க
குடும்பமே அப்படித்தான்.
பணம் பெரிதல்ல.
நீதிபதி சொன்னார்கள்,
ஒரு தனி மனிதனுக்கு செலவானது முக்கியமா.
நாட்டின்
ஒற்றுமை முக்கியமா என்று.
எனக்கு நாட்டின் ஒற்றுமைதான்
முக்கியம். நான் சொத்தை இழக்க
தயார். மாண்புமிகு நீதிதேவன்
அவர்களுக்கு சொல்ல
விரும்புவது இதுதான். அவர்
விருப்பப்பட்டதுபோல்
நாடு ஒற்றுமையாக இருக்கட்டும்.
அதற்காக நான் விழுந்தாலும்
பரவாயில்லை. ஆனால் விழுந்தால்
விதையாக விழுவேன்.
தனி மனிதன்தானே வீழ்த்தி பார்க்கலாம்
என்று தமிழகம் நினைக்கக்
கூடாது. விழுந்தால் விதையாக
விழுவேன். மரமாக வளர்வேன்.
தனி மரம்தானே தோப்பாக
முடியாது என்று நினைத்துவிடாதீர்கள்.
பல சுதந்திர பறவைகள்
வந்து அமரும் மரமாக நான்
இருப்பேன். மீண்டும் விதைகள்
விழும். சோலையாகும். காடாகும்.
ஆனால் விதை நான் போட்டது.
எனது வசனமே எனக்கு கைவருவது சந்தோஷமாக
இருக்கிறது.
எனக்கு அரசியல் கிடையாது. மதம்
கிடையாது என்பது எல்லோருக்கும்
தெரியும். எல்லா கட்சிப்
பிரமுகர்களும், இந்த வீட்டிற்குகூட
பல முதல் அமைச்சர்கள்
வந்து சென்றிருக்கிறார்கள். என்
தகப்பனாரின் நண்பர்களாக. நானும்
அப்படித்தான் எல்லோருடனும்
நழுவாமல், யார் மனதும்
புன்படாமல், மனித நேயம்
பாதகப்படாமல் எனக்கு மனதில்
பட்ட நியாயங்களை தைரியமாக
சொல்லக்கூடியவன் நான்.
எனக்கு மதம் கிடையாது. மனிதம்
தான்
என்பது உங்களுக்கு பலருக்கு தெரியும்.
இப்போது நான்
இங்கே வந்திருப்பது நிலை விளக்கம்.
தன்னிலை விளக்கம் அல்ல. இப்ப
என்ன பண்ண போறீங்க.
எனக்கு நிறைய
வீடு இருக்கு சாப்பிடறதுக்கு.
தங்கத்தானே இடமில்லை.
என்னை குடியமர்த்துவது எப்படி என்று தமிழ்
ரசிகர்களுக்கு தெரியும்.
என்னுடைய மூத்த சகோதரர்
உடல்நலமில்லாமல் இருக்கிறார்.
ஒன்னும் புரியலையா உலக
நாயகன் என பெயர் வைச்சதே,
ஊரை விட்டு வெளியே போ,
உள்ளூரில் என்ன
பண்ணிக்கிட்டு இருக்கே என்று சொல்கிறார்கள்
என்றார்.
எனக்கு மதசார்ப்பற்ற ஒரு இடம்
வேண்டும். அது தமிழகமாக
இல்லாமல் போய்விட்டால்,
மதசார்ப்பற்ற மாநிலம் இந்தியாவில்
உள்ளதா என்று தேடி குடியமர்வேன்.
இருந்ததெல்லாம் போய்விட்டது.
இனி இழப்பதற்கு ஒன்றும்
இல்லை என்னும் பொழுது,
குடியமர நான் உகந்ததாக கருதும்
மாநிலத்தில் தங்கலாம்
என்று இருக்கிறேன். காஷ்மீர் முதல்
கேரளம்
வரை ஒதுக்கி வைத்திருக்கிறேன்
நீங்கள் பார்ப்பீர்கள். எனக்கு இடம்
கிடைக்கவில்லை என்றால்,
மதசார்ப்பற்ற
ஒரு நாடு தேடி போவேன்.
திரைகடல் ஓடி திரைவியம் தேடு.
ஆனால், யாருக்கும் கடன் வைக்க
மாட்டேன். என் பழக்கம் அதுவல்ல.
ஜூரோ டேக்ஸ் அரியர்ஸ். அந்த
தைரியத்தில்தான் நான்
இங்கே உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறேன்.
இன்று மறுபடியும் சந்திக்க
வேண்டியிருக்கும். அதுவரைக்கும்
வீடு இருக்கும் என நினைக்கிறேன்.
அதை அப்புறம் பார்ப்போம்
(சிரித்துக்கொண்டே).
எனக்கு மதம் இல்லை. குலம்
இல்லை. பணமும்
இல்லை என்றால், பணம் எப்ப
வேண்டுமானாலும்
சம்பாதித்துக்கொள்ளலாம். ஆனால்
என்னுடைய திறமை என்னுடன்
இருக்கும். உங்கள் எல்லோருக்கும்
இந்த செய்தியை சொல்ல
வேண்டியிருப்பது என்னுடைய
கடமையாக இருக்கிறது.
இது மதசார்ப்பற்ற ஜனநாயக
நாடு என்று நான் இன்னமும்
நம்பிக்கொண்டிருக்கிறேன். நீதி தர
மறுப்பதும், தாமதிப்பதும்
ஒன்றுதான் என்கிறது ஒரு ஆங்கில
பழமொழி. எனக்கு கிடைக்க
வேண்டிய
நீதி தாமதப்பட்டுவிட்டதாக நான்
நினைக்கிறேன். அது என் தனிப்பட்ட
கருத்து. இருப்பினும்
எனக்கு நீதியின்பால்
நம்பிக்கை உள்ளது.
பொருத்திருந்து பார்ப்போம்.
இதை தவிர
எனக்கு சொல்லுவதற்கு வேறொன்றும்
இல்லை.
இவ்வாறு கூறினார

0 comments:

Post a Comment

THANKS FOR VISIT

Note: Only a member of this blog may post a comment.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More